Saturday, October 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பேராசிரியர் ராமசாமியின் அபார சேவயை பாராட்டி கௌரவிப்பு

பினாங்கு அக் 12
பினாங்கு மாநில அரசாங்கத்தில் 15 ஆண்டுகாலம் பினாங்கு தமிழர்களுக்கும் மற்றும் இந்தியர்களின் சமூக நலத்திற்கும் அரும்பாடு பட்ட அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர்
பி. ராமசாமி நேற்று கௌரவிக்கப்பட்டார்.
தற்போது உரிமை கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி வரும் இவர், குறிப்பாக பினாங்கில் உள்ள இந்திய சமூகத்திற்கு மாபெரும் சேவையை ஆற்றி வந்துள்ளதாக பினாங்கு மாநில இந்திய இளைஞர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.
நேற்று பினாங்கில் நடந்த இந்த கௌரவிப்பு வைபவத்தில், பினாங்கு இந்திய சமூகத்திற்கு பேராசிரியர் ராமசாமியின் அபார சேவைகள் குறித்து பேசப்பட்டன.
இந்நாட்டில் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனே குரல் கொடுக்கும் ஒரே இந்திய தலைவர் ராமசாமி தான் என அந்த அறிக்கை கூறியது.
பினாங்கு மாநிலத்தின் இந்திய அறப்பணி வாரிய தலைவர், பிறை சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்து பினாங்கு இந்தியர்களுக்கு பல வழிகளில் உதவிகளை ராமசாமி வழங்கி வந்துள்ளதாக அந்த அறிக்கை கூறியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular