Saturday, November 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோமாளி தோட்ட மக்களுடன் இனிமையான ஒரு மாலை பொழுது.

செகாமட் செப் 8
இங்குள்ள கோமாளி தோட்டம் மக்களுடன் ஒரு இனிமையான மாலை பொழுதை கழித்ததில் தான் மகிழ்ச்சி அடைவதாக தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.

கோமாளி தோட்டம், செகாமாட் மக்களுடன் மிகவும் இனிமையான ஒரு மாலைப் பொழுதை, “Jalinan Mesra MADANI Komuniti Ladang Gomali” நிகழ்ச்சியின் மூலம் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். மக்களுடன் நேரடியாக அமர்ந்து உரையாடவும், அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும், தேவைகளையும் அவர்களிடமிருந்தே நேரடியாகக் கேட்டறியவும் முடிகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, MADANI Segamat நடமாடும் சேவை மையத்தையும் அமைத்திருந்தோம். இதன் மூலம் அப்பகுதி மக்கள் தங்களது புகார்கள், பிரச்சினைகள் மற்றும் கவனிக்கப்பட வேண்டிய தேவைகளை நேரடியாகத் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேலும், 50 பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய கூடை வழங்கப்பட்டது. அதேபோல், கோமாளி தோட்டம் சுராவை சிறப்பாகப் பராமரிப்பதற்கும், அங்குள்ள ஜமாஅத்தினரின் நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் சுரா கமிட்டி பிரதிநிதியிடம் பண உதவியும் வழங்கப்பட்டது.

என்னைப் பொறுத்தவரை, மக்களிடம் நேரடியாகச் செல்வது என்பது வெறுமனே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மட்டுமல்ல. மக்களின் குரலை நேரடியாகக் கேட்டு, அவர்களின் நிலைமையைப் புரிந்துகொண்டு, உதவக்கூடிய விஷயங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதுதான் மிகவும் முக்கியம்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு பெரிதும் உதவிய கோமாளி தோட்டம் சமூகத்தின் பிரதிநிதி திருமதி மணிமேகலை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு எப்போதும் நெருக்கமாக இருக்க வேண்டும். செகாமாட் நகரமாக இருந்தாலும், கிராமமாக இருந்தாலும், தோட்டப்பகுதியாக இருந்தாலும், எந்த வேறுபாடுமின்றி தொடர்ந்து மக்களிடம் சென்று, அவர்களின் குரலைக் கேட்டு, அவர்களுடன் இணைந்து செயல்படுவேன் என அவர் குறிப்பிடுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular