
செப்பாங் செப் 3
ஆசியாவின் முன்னணி மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா மற்றும் துருக்கியின் முன்னணி மலிவு கட்டண விமான நிறுவனமான பெகாசுஸ்(Pegasus) விமான நிறுவனம் கூட்டாண்மை ஒன்றில் கையொழுதிட்டது.
இந்த கூட்டாண்மையின் வழி ஐரோப்பாவில் பல முக்கிய நகர்களுக்கு புதிய வழித் தடத்தை ஏர் ஆசியா எக்ஸ் அதிகரித்துள்ளது.
பெகாசுஸ் விமான நிறுவனத்தின் கூட்டான்மையின் மூலம் கோலாலம்பூரிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரின் வழி ஐரோப்பாவில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு தனது சேவையை ஏர் ஆசியா எக்ஸ் விரிவு படுத்துகிறது.
தொடக்க கட்டமாக லண்டன்(Stansted), மாஸ்கோ(Vnukovo),
அங்காரா(Esenboga),
சூரிக் மற்றும் ஏதென்ஸ் ஆகிய 5 நகர்களுக்கு இந்த சேவை இணைக்கப்படுகிறது.

இந்த கூட்டாண்மையை தொடர்ந்து கோலாலம்பூர்-இஸ்தான்புல் இடையிலான ஏர் ஆசியா எக்ஸின் நேரடி விமான சேவை தற்போது வாரத்திற்கு 4 முறையிலிருந்து எதிர் வரும் 2027 பிப்ரவரி முதல் 7 முறை என தினசரி சேவையாக அதிகரிக்கப்பட உள்ளது.
ஒரே முன்பதிவு-சுமைகளை மீண்டும் எடுக்க வேண்டிய அவசியமில்லை
இந்த Codeshare ஏற்பாட்டின் முக்கிய அம்சமாக, பயணிகள் ஒரே முன் பதிவில் தங்களது இறுதி இலக்கை அடைய முடியும்.
இஸ்தான்புலில் விமானம் மாறும் போது, பயணிகளின் 20 கிலோ செக்-இன் பயணப் பொதிகை இறுதி இலக்கிற்கு அனுப்பப்படும்.
எனவே இடைநிலையத்தில் மீண்டும் check-in செய்து பயணப் பொதிகளை எடுத்துச் சென்று மறுபடியும் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை.
வெ799 முதல் சிறப்பு கட்டணம்
இந்த கூட்டான்மையை முன்னிட்டு ஏர் ஆசியா சிறப்பு ஊக்குவிப்பு கட்டணத்தையும் அறிவித்துள்ளது.
கோலாலம்பூரிலிருந்து இஸ்தான்புல் வழியாக மேற்கண்ட 5 ஐரோப்பிய நகரங்களுக்கு ஒரு வழி பயண கட்டிடம்
வெ799 முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சலுகை செப்டம்பர் 2 ஆம் தேதி 6 ஆம் 2026 வரை AirAsia MOVE செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கான பயண காலம் 2 செப்டம்பர் 2026 முதல் 27 மார்ச் 2027 வரை தான்.
இதனிடையே இந்த கூட்டான்மை ஏர் ஆசியா எக்ஸின் 25 ஆம் ஆண்டு பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.

ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் உலகளாவிய குறைந்த கட்டண பயண வளலையமைப்பை உருவாக்குவதற்கான அடுத்த கட்டம் இது என்றார் அவர்.
இதனிடையே ஐரோப்பிய பயணிகள் கோலாலம்பூர் வழியாக ஆசியா-பசிப்பிக் பகுதிகளுக்கும், ஆசிய பயணிகள் துருக்கி மற்றும் ஐரோப்பாவுக்கும் எளிதாக பயணிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என பெகாசுஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி Guliz Ozturk கூறினார்.
ஒட்டுமொத்தத்தில் இந்த புதிய Codeshare சேவை மூலம் மலேசியாவிலிரேந்து ஐரோப்பாவுக்கான பயணம் மேலும் எளிதாகவும் அதிகமான இலக்குகளுடன் கூடியதாகவும் மாறும் என அவர் குறிப்பிட்டார்.


