Friday, November 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஒரே நாளில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் மிகப்பெரிய வரலாறு கண்டது!

கோலாலம்பூர், செப் 3

மலேசியா ஆட்சியில் இதுவரை கண்டிராத காட்சி கோலாலம்பூர் ஜாலான் டூத்தா  நீதிமன்ற வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆக 27 ) மூன்று முன்னாள் பிரதமர்கள் தனித்தனி வழக்கிற்காக ஒரே நேரத்தில் ஆஜரானார்கள்.

 நாட்டை ஆண்டவர்கள் இன்று நீதியின் முன் வரிசையில் நிற்கின்றார்கள். “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதை  இவர்கள் கண் கூடாக காட்டினர்.

பரபரப்பான மூன்று முகங்கள் இப்போது வர்ணிக்கப்படுகின்றன,   நஜீப் துன் ரசாக்கின் -1MDB ராட்சத சிவில் வழக்கு 2009 முதல் 2018 வரை பிரதமராக இருந்த 73 வயதுடைய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1Malaysia Development Berhad கொடுத்த 5.64 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிவில் வழக்கின் விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். நிதி மோசடி, நம்பிக்கை மீறல், அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மூலம் 1MDB பணம் கையாடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டுகின்றன.

முஹிடின் யாசின் – ஜானா விபாவா புயல் வழக்கு  2020 முதல் 2021 வரை காலகட்டத்தில் பிரதமராக இருந்த 79 வயதுடைய முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் கோவிட்-19  (COVID-19) காலத்தில் தொழில்களை காப்பாற்றுவதற்காக கொண்டு வந்ததாகச் சொல்லப்படும், “ஜானா விபாவா” திட்டம் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். நான்கு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் கட்சிக்காக RM232.5 மில்லியன் பெற்றதாகவும், RM200 மில்லியன் தொடர்பான மூன்று பணமோசடிகள் – RM200 மில்லியன் தொடர்புடையவை என விசாரணை நடைபெற்று வருகிறது.

இஸ்மாயில் சப்ரி – சொத்து மறைப்பு வழக்கு,2021 முதல் 2022 வரை பிரதமராக இருந்த 66 வயதுடைய இஸ்மாயில் சப்ரி யாகோப் சொத்துகளை அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டில் ஆஜரானார். கிட்டத்தட்ட US$1.46 மில்லியன் பணம் மற்றும் தங்கக் கட்டிகளை மறைத்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆக 7 ஆஜராக வேண்டியவர். இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டதால் விசாரணை தேதி ஆக 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பேராவிலிருந்து இரண்டு பேருந்து நிறைய ஆதரவாளர்கள் வந்து நீதிமன்ற வளாகத்தை நிரப்பினார்கள். அன்று வளாகமே போர்க்களம் போல் காணப்பட்டது. காலை 7 மணிக்கே ஜலான் டூத்தா வளாகம் பரபரப்பானது.

 பத்திரிகையாளர்கள் கேமராக்கள் ஆதரவாளர்கள் கூட்டம் என நெரிசல், மூன்று தலைவர்களின் வழக்குகளையும் ஒரே நேரத்தில் கவர் செய்ய ஊடகங்கள் திணறியதாக உள்ளூர் நிருபர்கள் கூறினர். போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.

அரசியல் விமர்சகர் சொல்கின்றார்கள் இது உலகின் முதல் முறையாக மூன்று முன்னாள் பிரதமர்கள் ஒரே நாளில் ஒரே நீதிமன்றத்தில் நிற்பது வழக்குகள் வெவ்வேறு, ஆனால் செய்தி ஒன்று – பதவி போனாலும் கணக்கு கேட்கும் நீதி போகாது.

ராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன என்ற பழமொழியின் உண்மையான பொருள் நாட்டை யார் ஆண்டாள் என்ன? அதிகாரம் மக்கள் கையில் தானே! என்பதுதான், ஆனால் நாம் அதை யார் ஆண்டார் எனக்கென்ன நான் என் வேலையை பார்க்கின்றேன் என்று புரிந்து கொண்டிருக்கின்றோம்.

இன்று பழக்கத்தில் அரசியல் அலட்சியம் எவன் வந்தாலும் எனக்கு கவலை இல்லை.

பழைய நோக்கம் ஆட்சியாளர் யார் இருந்தாலும் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும் என்கிற உரிமை உணர்வை எல்லோரிடமும் இருக்க வேண்டும்.

அடுத்த விசாரணை தேதிகள் எப்போது என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்ற நிலையில், அலை ஓசை மீடியா தொடர்ந்து உண்மைச் செய்திகளையும், சரியான தகவல்களையும் வழங்கும். இதனுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவரும், அலைஓசை மீடியா ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு தெரிவித்துள்ளார்.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular