Sunday, September 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தங்காக் மாவட்ட அளவில் தேசிய தினம் கொண்டாட்டம்(சுப்பிரமணியம்).

தங்காக் செப் 2
தங்காக் மாவட்ட அளவில் தேசிய தினம் கொண்டாட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டம் ஜொகூர் மெட்ரிகுலாஸி கல்லூரியில் நடைபெற்றது.
இந்த 69ஆவது தேசிய தின கொண்டாட்டத்திற்கு ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் அபிஸ் கஸாலி தலைமையேற்றார்.
இந்த கொண்டாட்ட அணி வகுப்பில் பல இயக்கங்கள், அரசாங்க அமைப்புகள், சீருடை இயக்கங்கள் 37 குழுக்கள் கலந்து கொண்டு தேசிய பற்றி வெளிப்படுத்தினர்.
இந்த கொண்டாட்டத்தில் பங்சா ஜொகூரின் ஒற்றுமை வெளிப்படுத்தப்பட்டதாக ஜொகூர் மாநில ஒற்றுமை மற்றும் கலாச்சாரப் பிரிவு ஆட்சி குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் கூறினார்.
அணிவகுப்பில் கலந்து கொண்ட அனைத்து பிரிவினரும் தங்களின் தேசிய பற்றி வெளிப்படுத்தியது மகிழ்ச்சி தருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய தினம் என்பது கால அட்டவணையில் ஒரு தேதி மட்டும் இன்றி நமது முன்னோர்கள் நம் மீது வைத்துள்ள ஒரு நம்பிக்கை என்றார் அவர்.
ஆகையால் நாட்டின் மீது நமது விசுவாசம் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular