
கோலாலம்பூர் ஆக 20
மலேசிய திரைப்படங்களுக்yகு ஆதரவு அளிக்க MMFC இயக்கம் தொடங்கப்பட்டது.
மலேசிய கலை உலகம்(MKU) உரிமையாளர் எஸ்பி பிரபாவின் ஏற்பாட்டிலான இந்த இயக்கத்தை நேற்று பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
எஸ்பி பிரபாவின் இந்த அபார முயற்சியை டத்தோஸ்ரீ ஜி வெகுவாக பாராட்டினார்.

இந்த MMFC இயக்கம் அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ஆதரவை வழங்கும் என எஸ்பி பிரபா கூறினார்.
மலேசியாவில் முதல் முறையாக இப்படி ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் 69 ஆவது சுதந்திர தின கொண்டாட்டமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுதந்திர கொடிகளை டத்தோஸ்ரீ ஜி வழங்கினார்.
சுமார் 25 ஊடகவியாளர்கள் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட அனைத்து ஊடகவியாளர்களுக்கும் டத்தோஸ்ரீ ஜி அன்பளிப்பு பைகளை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான உணவு பரிமாறப்பட்டது.



