Friday, August 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசிய விமானிகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க KLIA உறுதி செய்யுமா?

கோலாலம்பூர் ஆக 20

ஜூலை 29 அன்று, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சோகர்னோ–ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், 25 கிலோ எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெத்தாம்பெட்டமைன் வைத்திருந்ததாகக் கூறி மலேசியா ஏர்லைன்ஸ் (Mas) விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெட்டாலிங் ஜெயா: கடந்த மாத இறுதியில் இந்தோனேசியாவில் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விமான நிறுவனம் முழுவதும் கட்டாயமாக   போதைப்பொருள் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலேசியா ஏவியேஷன் குழுமம் Malaysia Aviation Group (MAG) தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கேப்டன் நஸாருதீன் ஏ. பக்கார்(Captain Nasarudeen A. Bakkar), வெளியிட்ட அறிக்கையில், தேசிய விமான நிறுவனத்தின் 2,840 கேபின் பணியாளர்களுக்கான போதைப்பொருள் பரிசோதனை 18 ஆகஸ்ட்  முதல் 3 செப்டம்பர்க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.     

MAS-இன் துணை நிறுவனமான Firefly நிறுவனத்திலும் பரிசோதனை நடைபெற்றும் வருகிறது. இதில் 158 விமானிகளும் 163 கேபின் பணியாளர்களும் அடங்குவர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அனைவருக்கும் போதைப்பொருள் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன என்றும் MAG தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு என்பது நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் மையமாகவும் உள்ளது. எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும், செயல்பாட்டு தரநிலைகளை நிலைநிறுத்தவும், பயணிகள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் MAG தலைமைத்துவத்திற்கு பாராட்டுகள். இந்தப் பொறுப்பான அணுகுமுறை மேலும் சிறப்பாக இருக்கட்டும்.  

Mas விமானி போதைப்பொருள் கடத்தல் கடந்த 2024ஆம் ஆண்டு முதல் தனது விமானப் பயணங்களைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருளைக் கடத்தியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் கூறுகையில், கைது செய்யப்பட்ட விமானி தனது விமானப் பயண அட்டவணையைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருளைக் கொண்டு சென்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஜகார்த்தாவில் மலேசிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தொடர்பான முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தக் கும்பலுடன் தொடர்புடைய உறுப்பினர்களை போலீசார் தேடி வருவதுடன், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் கிடைத்த பணத்தின்

பரிமாற்றங்களையும் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும், விமானி எவ்வாறு கடுமையான பாதுகாப்புச் சோதனைகளைத் தாண்டி போதைப்பொருளை எடுத்துச் சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே வேலை நம் மலேசியா எல்லா  விமானங்களும் பயணிகளை மரியாதையுடன் பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும்.

 நம் நாட்டிற்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டும்.மது, போதைப்பொருள் எதுவும் இல்லாமல் நல்ல ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். விமானம் சரியான நேரத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தரை இறங்க வேண்டும்.

ஆசியாவில் வளர்ந்து வரும் மலேசியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என மலேசிய மறுவாழ்வு சங்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ அழகேசு தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular