Wednesday, August 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம்: முதல்வர் விஜய் அறிவிப்பு.

சென்னை ஆக 19

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசு சார்பில் வாகன வசதி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் இன்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்டார்.

அதன்படி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் வாகன வசதிக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளில் நேரடியாகச் சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவதற்கும் வசதி ஏற்படும்.

மேலும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ள அரசு சார்பில் மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular