
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப் போவதாக இந்த தொகுதியின் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் உறுதியளித்தார்.
இந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு பல அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தாம் அடையாளம் கண்டு வந்துள்ளதாக அவர் சொன்னார்.
அதுமட்டுமின்றி இங்குள்ள மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக தம்மால் இயன்ற உதவிகளை தாம் செய்து வருவதாக அவர் சொன்னார்.
ஒரு தனி மனிதனாக இந்த தொகுதியில் உள்ள மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.
இந்த தொகுதி மக்களின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு மாநில சட்டமன்றத்திற்கு சென்றால் மட்டுமே மக்களின் குறைகளை அங்கு கொண்டு செல்ல முடியும் என்றார் அவர்.
இதன் காரணமாக தான் இந்த தேர்தலில் தம் களம் இறங்கி உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் மட்டுமே மாநில அரசாங்கத்திடமிருந்து நிதி ஒதுக்கீடுகளை பெற்றுத் தர முடியும் என அவர் சுட்டிக் காட்டினார் என அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில் இது வரை தமது சேவைகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் மாநில சட்டமன்ற தேர்தலில் தங்களது பிரதிநிதியாக இங்கு உள்ள மக்கள் தம்மை தேர்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


