Wednesday, July 29, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நீலாயில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்குவேன்

எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நீலாய் தொகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தாம் முன்னுரிமை வழங்கப் போவதாக இத்தொகுதியின் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் டத்தோ வீ. சரவண குமார் உறுதி அளித்தார்.
நீலாய் நகரில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் இங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நீலாய் ஒரு பெரிய நகரம். ஆனால் இந்த நகரத்தில் ஒரு மருத்துவமனை இல்லாதது பெரும் வருத்தத்தை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 28 ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் தாம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை கண்கூடாக கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 1998- இல் வேலை நிமித்தம் காரணமாக இங்கு வந்த தாம், இங்குள்ள மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை நன்கு அறிந்துள்ளதாக அவர் சொன்னார்.
டிஎஸ்கே அரசு சாரா அமைப்பு ஒன்றின் வழி இங்கு உள்ள மக்களுக்கு போதுமான உதவிகளை செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
‘நீலாய் எனது ஊர், எனது வீடாக மாறிவிட்டதால், என்னால் முடிந்த உதவிகளை இங்குள்ள மக்களுக்கு செய்து வருகிறேன்’ என்றார் அவர்.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டால், இங்குள்ள மக்களுக்கு இன்னும் அதிகமான சேவைகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தேர்தலில் தாம் குதித்துள்ளதாக அவர் சொன்னார்.
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தாம் சேர்வு செய்யப்பட்டால், இங்குள்ள மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை மாநில சட்டமன்றத்தில் தம்மால் குரல் கொடுக்க முடியும் என அவர் சொன்னார்.
இந்நாள் வரை இங்குள்ள மக்களுக்கு இன பாகுபாடின்றி தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் தாம் செய்து வருவதாக அவர் சொன்னார்.
ஆகையால் எதிர் வரும் தேர்தலில் உங்களின் பிரதிநிதியாக தம்மை தேர்வு செய்யும்படி நீலாய் தொகுதி வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular