Friday, November 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக தொடர்ந்து 17வது முறையாக ஏர் ஆசியா தேர்வு!

உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக தொடர்ந்து 17வது முறையாக ஏர் ஆசியா தேர்வு பெற்று சாதனை படைத்தது.
நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்ற 2026 Skytrax World Airline Awards விருதளிப்பு விழாவில் ஏர் ஆசியாவிற்கு இந்த மாபெரும் அங்கீகாரம் கிடைத்தது.
கடந்த 25 ஆண்டுகளாக விமான பயணம் மலிவு கட்டணத்தில் மற்றும் அணுகக் கூடிய வகையில் ஏர் ஆசியாவின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.
உலகளாவிய விமான போக்குவரத்தில் மிகவும் மதிக்கத்தக்க விருதாக Skytrax World Airline Awards விருது விழா விளங்கி வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எளிய நோக்கில் இந்த விமான நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியதாக இந்த விருதை பெற்றுக் கொண்ட ஏர் ஆசியா இணை நிறுவனர் டத்தோ கமாருடின் மெரானுன் கூறினார்.
மலிவு கட்டணத்தில் அனைவரும் சிறகடிக்கலாம் என்ற இலக்கை அடைந்த முன்னணி விமான நிறுவனம் ஏர் ஆசியா என்பதை கூறிக் கொள்வதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய பயணிகள் ஏர் ஆசியா மீது வைத்துள்ள நம்பிக்கை தான் தங்களின் இந்த சாதனைக்கு காரணம் என்றார் அவர்.
இருப்பினும் இதனை தாங்கள் உத்திரவாதமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.ஏர் ஆசியாவின் பயணம் தொடர்ந்து வெற்றி நடை போடும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ‘இந்த அங்கீகாரம் எங்களின் பயணிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை’ என ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
இவர்கள் ஏர் ஆசியா மீது தொடர்ந்து வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு தாங்கள் நன்றி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய விமான போக்குவரத்து துறை நிலையற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் சவால்களை எதிர்நோக்கி வந்தாலும், இது ஒரு சோதனை காலமாக தாங்கள் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் தங்களின் ஒவ்வொரு Allstars பணியாளர்களும் பயணிகளுக்கு நிறைவான சேவைகளை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த நிலையில் தொடர்ந்து 17வது முறையாக கிடைக்கப்பெற்ற இந்த விருது அனைத்து Allstars பணியாளர்களுக்கும் கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் என்றுதான் கூற வேண்டும் என்றார் அவர்.
இந்த விருதளிப்பு விழாவில் தொடர்ந்து 17வது முறையாக ஏர் ஆசியாவிற்கு கிடைத்த வெற்றி ஒரு மாபெரும் சாதனை என Skytrax நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி Edward Plaisted கூறினார்.
ஏர் ஆசியா உலகளாவிய பயணிகளுக்கு மலிவு கட்டணத்தில் தரமான சேவையை வழங்கி வருவது தான் இந்த அங்கீகாரத்திற்கு பிரதான காரணம் என்றார் அவர்.
தொடர்ந்து 17 ஆண்டுகளாக ஏர் ஆசியா இந்த விருதை பெற்று வருவது ஒரு மாபெரும் சாதனையாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 25 ஆண்டுகளாக மலிவான கட்டணத்தில் தரமான சேவையை பயணிகளுக்கு வழங்கி வருவது தான் இந்த அங்கீகாரம் என அவர் தெரிவித்தார்.
ஏர் ஆசியாவின் இந்த மாபெரும் சாதனை, உலகில் எந்தவொரு விமான நிறுவனமும் பெற்றதில்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular