
செப்பாங் செப் 18
உலகின் முதல் நிலை மலிவு கட்டண மெகா மையமாக ஏர் ஆசியா தொடர்ந்து கால் பதித்து வருகிறது.AirAsia-வின் விரிவான விமானப் போக்குவரத்து வலையமைப்பு காரணமாக, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KUL) உலகின் நான்காவது அதிக இணைப்புகளைக் கொண்ட சர்வதேச “Megahub” ஆகவும், OAG-ன் 2026 Low-Cost Megahubs Index பட்டியலில் உலகின் No.1 குறைந்த கட்டண மெகா ஹப் ஆகவும் தனது நிலையை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.
மேலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிக இணைப்புகளைக் கொண்ட மெகா ஹப் என்ற முதலிடத்தையும் KUL தொடர்ந்து பெற்றுள்ளது. OAG-ன் சமீபத்திய Megahubs அறிக்கையின்படி, AirAsia உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மூலம் KUL-இல் இருந்து 154 இடங்களுக்கு பயணிக்க முடிவதுடன், சுமார் 15,000 குறைந்த கட்டண இணைப்பு வாய்ப்புகள் உள்ளன.
KUL விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்களில் 34% AirAsia-வுக்குச் சொந்தமானவை என OAG அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் KUL-இல் AirAsia ஆதிக்கம் செலுத்தும் விமான நிறுவனமாகத் திகழ்கிறது.
AirAsia-வின் விரிவான வலையமைப்பும், அதிக விமான சேவை frequency-யும் கோலாலம்பூரிலிருந்து கிடைக்கும் சர்வதேச இணைப்புகளை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் மலேசியத் தலைநகர் Asean நாடுகள், ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல்வேறு இடங்களுடன் இணைக்கப்படுகிறது.
AirAsia Group நிறுவனத்தின் Group CEO Bo Lingam கூறுகையில்:
“உலகின் மிகச் சிறந்த இணைப்புகளைக் கொண்ட விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக கோலாலம்பூர் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுவது, மலேசியாவில் AirAsia பல ஆண்டுகளாக உருவாக்கியுள்ள வலுவான வலையமைப்பின் பிரதிபலிப்பாகும்.
MAHB உடனான எங்களது ஒத்துழைப்பும், விமானப் போக்குவரத்து சூழலை ஒன்றாக வளர்ப்பதற்கான கூட்டு முயற்சிகளும் இதற்கு முக்கியமானவை.
தற்போது முழு விமானத் துறையும் எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், KUL-இல் ஆதிக்கம் செலுத்தும் விமான நிறுவனமாக AirAsia, பிராந்திய இணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதிலும், கோடிக்கணக்கான பயணிகளுக்கு மலிவு விலையில் பயண வாய்ப்புகளை வழங்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
குறிப்பாக Visit Malaysia Year 2026 முன்னிட்டு, எங்களது விரிவான விமான வலையமைப்பு மலேசியா மற்றும் Asean நாடுகளின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
சுற்றுலாவைத் தாண்டி, இந்த விமான இணைப்புகள் வர்த்தகம், தொழில் மற்றும் பிராந்திய அளவிலான மக்கள் இயக்கத்தையும் எளிதாக்குகின்றன. இதன் மூலம் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் கூடுதல் பங்களிப்பு கிடைக்கும். மேலும், கோலாலம்பூரை Asean மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கான முக்கிய நுழைவாயிலாக வலுப்படுத்தும்.”
AirAsia தனது விமான வலையமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வரும் நிலையில், Asean மற்றும் உலகின் முக்கிய சந்தைகளுக்கு இடையிலான விமான இணைப்புகளை மேலும் அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளை, மலிவு விலையில் பயணிக்கும் வாய்ப்புகளை உருவாக்கி, பிராந்தியத்தின் முன்னணி இணைப்பு விமான நிறுவனமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலும் செயல்பட்டு வருகிறது.



