Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பலோன் டி ஓர் கால்பந்து விருதை ரோட்ரி வென்றார்: ரியால்மாட்ரிட் விழாவை புறக்கணித்தது

உலகின் சிறந்த கால்பந்து வீருக்கான பலோன் டி ஓர் கால்பந்து விருதை ரோட்ரி வென்றார்.

மென்செஸ்டர் சிட்டி, ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரரான ரோட்ரி நான்காவது முறையாக இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தையும் யூரோ 2024 கிண்ணத்தையும்  வென்றது மூலம் இவ்விருதை தட்டிச் சென்றார்.

அதே வேளையில் ரியல்மாட்ரிட் கிளப் இந்த விழாவை முழுமையாக புறக்கணித்துள்ளது.

காரணம் உலகின் சிறந்த வீரருக்கான பரிசை ஒரு தற்காப்பு ஆட்டக்காரருக்கு வழங்குவதற்கான முடிவு சற்றே ஆச்சரியமாக இருந்தது.

லா லீகா,  சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர் ரியல்மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர் விழாவிற்கு முன் பட்டியலில் முன்னணியில் காணப்பட்டார்.

இந்நிலையில் பாரிஸில் நடந்த விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ரியால்மாட்ரிட் கிளப் அதன் பிரதிநிதிகள் இந்த  விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தது.

இதனால்  வினிசியஸ் ஜூனியர் வெற்றி பறிக்கப்பட்டது.

28 வயதான ரோட்ரி, கடந்த சீசனில் பிரிமியர் லிக் கிண்ணத்தை வெல்வதற்கான அர்செனலின் சவாலை  முறியடித்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் யூரோ 2024 இல் ஸ்பெயின் ஜெர்மனியில் சாம்பியனாக உருவெடுத்ததால் போட்டியின் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular