
கோவிட் 19 தொற்று காலத்தின் போது மலேசியாவில் முதலாவது தனியார் தடுப்பூசி மையத்தை தாங்கள் தான் தொடங்கியதாக எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பெர்சாத்து கட்சியின் நீலாய் தொகுதி வேட்பாளர் டத்தோ வீ. சரவண குமார் கூறினார்.
கோவிட் தொற்று அந்த கால கட்டத்தில் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேருக்கு இலவச தடுப்பூசியை தாங்கள் வழங்கினோம் என்றார் அவர்.
டிஎஸ்கே அரசு சாரா அமைப்பின் மூலம் இலவச தடுப்பூசி வழங்கிய மலேசியாவில் முதல் நிறுவனம் தாங்கள் தான் என்றார் அவர்.
கடந்த 28 ஆண்டுகளாக நீலாய் வட்டாரத்தில் அனைத்து சமூகங்களுக்கும் பல்வேறு வழிகளில் தாங்கள் உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
இங்குள்ள மலாய் சமூகத்தின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தாங்கள் தீர்வு கண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர்களின் கல்வி, சமூக நலன், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விவகாரங்களுக்கு தீர்வு கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்பட்டால் இங்குள்ள மக்களுக்கு இன்னும் அதிகமான சேவைகளை தம்மால் வழங்க முடியும் என அவர் உறுதியளித்தார்.
ஆகையால் இந்த தேர்தலில் தம்மை வெற்றி பெறச் செய்ய ஒரு வாய்ப்பு வழங்கும்படி இங்குள்ள வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இங்குள்ள வட்டார மக்கள் தமக்கு மிகவும் அறிமுகமான ஒருவர் என்பதால் தமக்கு வாக்களிக்கும் படி அவருக்கு கோரிக்கை விடுத்தார்.
தம்மை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டால் நீலாய் வட்டார மக்கள் எதிர் நோக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சட்ட மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல போவதாக அவர் உறுதி அளித்தார்.


