
தலைநகரில் உள்ள செந்துல் ராயா பொலிவர்டில் ஒரு அழகிய மற்றும் அற்புதமான ஒரு கலாச்சார மையம் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எஸ்.பி.கே தெய்வீக கலாச்சார மையத்தை அதன் இயக்குனர் சாந்தினி கடந்த ஓராண்டு காலமாக வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார்.
ரம்யமான சூழ்நிலையை கொண்ட இந்த மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 25 ஜூலை 2026-ல் இந்த மையம் திறக்கப்பட்டாலும் கடந்த 4 ஏப்ரல் 2026-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாக சாந்தினி கூறினார்.
தெய்வீக கலை அம்சங்களைக் கொண்ட இந்த மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பொதுமக்கள் முன் வரலாம் என்றார் அவர்.
இயக்கங்கள், அரசு சாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களின் நிகழ்ச்சிகளை இந்த அம்சமான மையத்தில் நடத்தலாம் என அவர் குறிப்பிட்டார்.
சுமார் 100 பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த மையத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவோருக்கு மது பானங்கள் அனுமதி இல்லை என்றார் அவர்.
இது ஒரு தெய்வீகமான கலாச்சார மையம் என்பதால், அதன் மரபு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நமது இந்திய சமூகத்தினர் சம்பந்தப்பட்ட சடங்குகள், சிறிய அளவிலான ஒன்று கூடும் நிகழ்ச்சிகள், பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை இங்கு நடத்தலாம்.
மேலும் இதர நிகழ்ச்சிகளை இங்கு நடத்த விரும்புவோர் தங்களை தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என்றார் அவர்.
குறிப்பாக நமது இந்திய உள்நாட்டு கலைஞர்கள் இந்த மையத்தில் தங்களின் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் தமது முயற்சியில் தாம் பாடல் பயிற்சிகளை இந்த மையத்தில் கற்றுத் தருவதாக அவர் தெரிவித்தார்.
எஸ்.பி.கே தெய்வீக கலாச்சார மையம் ஆண்டு இறுதியில் பாடல் திறன் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சிறுவர்கள் முதல் முதியவர்களுக்கான இந்த பாடல் திறன் போட்டி இவ்வாண்டு இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த பாடல் திறன் போட்டிக்கான பயிற்சி இந்த மையத்தில் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பாடல் திறன் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்த மையத்தில் தியான பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த மையத்தில் தங்களின் நிகழ்வுகளை நடத்த விரும்புவோருக்கு நியாயமான கட்டணங்கள் மட்டுமே விதிக்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கான மேல் விவரங்களுக்கு தமது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் சொன்னார்.
தொடர்புக்கு:
சாந்தினி
01128793270


