Saturday, July 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தாமான் ஜெயாவில் வீடு வீடாக சென்று சஞ்சீவன் சூறாவளி பிரச்சாரம்

எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஜெராம் பாடாங் தொகுதியில் போட்டியிடும் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன், இங்கு தாமான் ஜெயாவில் வீடு வீடாக சென்று சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த வட்டார மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சனைகள் என்ன என்பதை கேட்டு அறிந்து வருகிறார்.
இங்குள்ள சமூகத்தின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் தாம் தேர்வு செய்யப்பட்டால் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என வலியுறுத்தி வருகிறார்.
இந்த தேர்தலில் தமது வெற்றிக்கு பிறகு, ஜெராம் பாடாங் தொகுதியில் பெரும் மாற்றத்தை கொண்டு வரப் போவதாக அவர் வலியுறுத்தி வருகிறார்.
இங்குள்ள மக்களின் சமூக நலன், கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய விவகாரங்களுக்கு தாம் முன்னுரிமை வழங்கப் போவதாக பெர்சாத்து கட்சியின் பெர்செக்குத்து பிரிவின் தலைவரும் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினருமான அவர் உறுதியளித்தார்.
இந்த தொகுதியில் பல ஆண்டு காலமாக இங்குள்ள மக்களுடன் அணுக்கமாக இருந்து வருவதால், இங்குள்ள மக்கள் வரும் தேர்தலில் தமக்கு பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
எதிர் தரப்பு அரசியல்வாதிகள் வழங்கி வரும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என இங்குள்ள மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த தொகுதியில் பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக மணிவண்ணன் போட்டியிடுகிறார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular