Monday, July 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சிரம்பான் ஜெயா தொகுதிக்கு முகுந்தன் பொருத்தமான வேட்பாளர் – டத்தோ குணா

எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் சிரம்பான் ஜெயா தொகுதிக்கு முகுந்தன் ஒரு பொருத்தமான வேட்பாளர் என இந்த தொகுதியில் 4 தவணைக்காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த
டத்தோ ப. குணசேகரன் கூறினார்.
இந்த தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான இவர் ஒரு துடிப்பு மிக்க இளைஞர் என்றார் அவர்.
நீண்ட காலமாக ஜசெகவில் இணைந்து பல பொறுப்புகளை வகித்து வந்துள்ள முகுந்தன், இந்த தொகுதி மக்களின் தேவைகளை நன்கு புரிந்து வைத்துள்ளார் என்றார் அவர்.
தமது சிறப்பு அதிகாரியாக இருந்து வந்துள்ள இவர், அந்த காலகட்டத்தில் இந்த தொகுதி சட்டமன்ற அலுவலக பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார் என அவர் சுட்டிக் காட்டினார்.
முகுந்தன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், இங்குள்ள மக்கள் இவரை எளிதாக அணுகி தங்களின் பிரச்சினைகளை கொண்டு செல்ல முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆகையால் எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்ற தொகுதியில் இந்த தொகுதி மக்கள் முகுந்தனை வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular