Saturday, July 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஸ்ரீ தஞ்சோங் தொகுதியை மஇகா கைப்பற்றும்!

எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியை மஇகா கைப்பற்றும் என மஇகா உதவி தலைவர் டத்தோ டி. முருகையா நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தத் தொகுதியில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து மஇகாவின் அச்சுதன் போட்டியிடுகிறார் என்றார் அவர்.
இங்கு ஸ்ரீ தஞ்சோங் தொகுதிக்கான தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
இந்த தொகுதியில் மலாய்க்கார, சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு நல்ல ஆதரவை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த தொகுதியில் தமது தலைமையில் மஇகா வியூகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தேசிய முன்னணியின் இதர பங்காளி கட்சிகளுடன் இணைந்து மஇகா சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
ஸ்ரீ தஞ்சோங் மஇகா தொகுதி தலைவருமான அச்சுதன் ஒரு திறமையான வேட்பாளர் என்பதால், இங்குள்ள மக்களின் ஆதரவு இவருக்கு அதிகரித்து வருவதாக அவர் சொன்னார்.
ஆகையால் எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் இங்குள்ள வாக்காளர்கள் திரண்டு வந்து தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular