
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் லோபாக் தொகுதியியை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் பி.எம் குமார் கைப்பற்றுவார் என அந்த கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.
பாஸ் ஆதரவு பேரவையைச் சேர்ந்த குமார் பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருடன் நேரடி போட்டியை சந்திக்கிறார்.
கடந்த சனிக்கிழமை நடந்த வேட்பு மனு தாக்கலில் இவருக்கு ஆதரவாக பாஸ் உதவி தலைவர் டத்தோ இட்ரிஸ் அமாட், பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே இந்த தொகுதி பாக்காத்தான் ஹராப்பானின் கோட்டையாக திகழ்ந்து வந்த போதிலும், இந்த தொகுதியை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கைப்பற்றும் என பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வலிமையாக இருப்பதால், இந்த தொகுதியில் குமாரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தொகுதியில் போட்டியிட குமாருக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


