Saturday, July 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நீலாய் தொகுதியில் டத்தோ சரவண குமார் சூறாவளி பிரச்சாரம்!

எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் நீலாய் தொகுதியில் போட்டியிடும் எண் 5 வேட்பாளர் டத்தோ வி. சரவண குமார் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
பெர்சாத்து கட்சியின் நெகிரி செம்பிலான் பெர்செக்குத்து பிரிவின் தலைவருமான அவர் பெர்சாத்து கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் மக்களிடையே நன்கு அறிமுகமான அவர், இங்குள்ள மக்களுக்கு பல வழிகளில் உதவி வருகிறார்.
இந்தத் தொகுதியில் உள்ள தமக்கு நன்கு அறிமுகமாகிவிட்டதால், இந்த தேர்தலில் தாம் துணிச்சலுடன் களமிறங்கியுள்ளதாக டத்தோ சரவண குமார் கூறினார்.
வரும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், சமூக நலன் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப் போவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் நீலாய் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார் உட்பட ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் பாக்காத்தான் ஹராப்பானை சேர்ந்த அருள் குமார் இரண்டு தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular