
விரைவில் நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இங்குள்ள தாமான் ஜெயா மக்களுடன் ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியின் பெர்சாத்து வேட்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
இங்குள்ள அங்காடி உணவகம் ஒன்றில் உணவு பரிமாறி இந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அவர் கேட்டறிந்தார்.
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஜெராம் பாடாங் தொகுதியில் தாம் வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் பெரும் மாற்றத்தை தாம் கொண்டு வரப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொகுதியில் உள்ள மக்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலங்களில் அதிக கவனத்தை தாம் செலுத்தப் போவதாக அவர் உறுதியளித்தார்.
கடந்த கால மாநில அரசாங்கங்கள் இந்த தொகுதி மக்களின் நலங்களுக்கு அதிக கவனம் செலுத்தவில்லை என்றார் அவர்.
ஆகையால் இந்த தேர்தலில் தமக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தத் தொகுதியில் தாம் வெற்றி பெற்றால், இங்குள்ள மக்கள் இது நோக்கம் பிரச்சனைகளை மாநில சட்டமன்றத்திற்கு தாம் கொண்டு செல்ல போவதாக அவர் சொன்னார்.


