
சிரம்பான் ஜூலை 18
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பெர்சாத்து கட்சியை பிரதிநிதித்து 5 இந்திய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்த தேர்தலில் ஜெராம் பாடாங் தொகுதியில் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன்,
நீலாய் தொகுதியில் தொழிலதிபர் டத்தோ சரவணக்குமார், ஸ்ரீ தஞ்சோங்கில் லவினேஸ்வரன், சிரம்பான் ஜெயாவில் மகேந்திரன் மற்றும் மாம்பாவ் தொகுதியில் சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஜூலை 18 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சி தனது சொந்த சின்த்தின் கீழ் போட்டியிடுகிறது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளில் காரணமாக இந்த தேர்தலில் பெர்சாத்து சுயேட்சையாக போட்டியிடுகிறது.
ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பெர்சாத்து 24 தொகுதிகளில் போட்டியிடுவதாக முஹிடின் கூறினார்.
இந்த தேர்தலில் முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில் பெர்சாத்து கட்சி பாஸ் கட்சியுடன் இணைந்து போட்டிட்டதால், முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.


