
சிரம்பான் ஜூலை 18
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலை பிரதிநிதித்து 3 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் லோபாக் தொகுதியில் பாஸ் ஆதரவு பேரவையின் நெகிரி செம்பிலான் மாநில தலைவர் டாக்டர் குமார் போட்டியிடுகிறார்.
லுக்கூட் தொகுதியில் எம்ஐபிபி கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ்குமார் போட்டியிடுகிறார்.
மற்றொரு பெரிக்காத்தான் நேஷனல் இந்திய வேட்பாளர் எரிக் மைக்கல் மாம்பாவ் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் மற்றொரு பங்காளி கட்சியான பெர்சாத்து தனது சொந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறது.
பாஸ் கட்சியுடன் ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக இந்த தேர்தலில் பெர்சாத்து தனித்து களமிறங்குகிறது.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று ஜூலை 18 ஆம் சனிக்கிழமை நடைபெறுகிறது.


