Friday, July 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

காஹாங் தொகுதியை மீண்டும் தற்காப்போம்-சிவசுப்பிரமணியம் கோரிக்கை

நாளை ஜூலை 11 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் காஹாங் தொகுதியில் தேசிய முன்னணி பிரதிநிதித்து போட்டியிடும் மஇகா வேட்பாளர் ருகேந்திரன் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற நாம் உறுதி செய்ய வேண்டும் என மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.
கடந்த 4 தவணைக்காலமாக இந்த தொகுதி தேசிய முன்னணியின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது.
மஇகாவை சேர்ந்த வித்யானந்தன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.
மேலும் மாநில ஆட்சி குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.
இந்த தொகுதி மக்களுக்கு தேசிய முன்னணி பல மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதே வேளையில் இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக
(செம்பொரோங்) அம்னோவின் முக்கியத் தலைவர்கள் ஒருவரான ஹிசாமுடின் இருந்து வருகிறார்.


தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மத்திய அரசாங்கத்தில் பல முக்கிய பதிவுகளை வகித்து வந்துள்ள இவர், இந்த தொகுதியில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு அதிகமான மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தத் தொகுதியில் 23,000- க்கும் மேற்பட்டை மலாய் வாக்காளர்கள்,6,000-க்கும் மேற்கொள்ளப்பட்ட சீன வாக்காளர்கள் மற்றும் சுமார் 850 இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.


ருகேந்திரன் ஒரு திறமையான இளைஞன் என்பதால் இவரை இந்த தொகுதியில் கட்சியின் சார்பில் போட்டியிட மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் முடிவு செய்துள்ளார் என்றார் அவர்.
இந்த நிலையில் இவரின் வெற்றிக்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இது மட்டுமல்லாமல் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகாவை பிரதிநிதித்து போட்டியிடும் இதர மூன்று வேட்பாளர்களையும் நாம் வெற்றியடைய செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular