Thursday, July 9, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

புக்கிட் பாத்துவில் குமரனை வெற்றியடைய செய்வோம்-சிவசுப்பிரமணியம் சூளுரை!

எதிர் வரும் ஜூலை 11 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் புக்கிட் பாத்து தொகுதியில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து போட்டியிடும் மஇகா வேட்பாளர் குமரனே நாம் வெற்றியடைய செய்ய வேண்டும் என மஇகா மத்திய செலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் சூழரைத்தார்.
இந்த தேர்தலில் இவரின் வெற்றி காலத்தின் கட்டாயம் என்றார் அவர்.
காரணம் கடந்த 15 ஆவது மாநில சட்டமன்ற தேர்தலில் மஇகா சார்பில் போட்டியிட்ட சுப்பையா 137 சொற்ப வாக்குகளில் மட்டுமே தோல்வி அடைந்தார்.
இதன் காரணமாக கடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சி ஒரு தொகுதியை இழந்து விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் இம்முறை இந்த தொகுதியில் போட்டியிடும் ஜொகூர் மாநில மஇகா செயலாளர் குமரனை இந்த தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்கள் வெற்றி அடைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஒரு மாவட்ட மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ள இவர், தேர்வு செய்யப்பட்டால் இந்த தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்ற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


அதே வேளையில் ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் அபிஸ், இந்த தொகுதிக்கு பல மேம்பாட்டு திட்டங்களை வடிவமைத்துள்ளார்.
ஆகையால் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலில், இங்குள்ள இந்திய வாக்காளர்கள் சமுதாய உணர்வுடன் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
‘குமரனை நீங்கள் வெற்றியடைய செய்ய வேண்டும். இவர் வெற்றி பெற்றால் மாநில சட்டமன்றத்தில் உங்களுக்காக இவர் நிச்சயம் குரல் கொடுப்பார்’என்றார் அவர். அதே வேளையில் சனிக்கிழமை நடைபெறுவதற்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ரவீன் குமார்(கெமெலா), ருகேந்திரன்(காஹாங்) மற்றும் பன்னீர்செல்வம்
(பெர்லிங்) ஆகிய வேட்பாளர்களையும் நாம் வெற்றியடைய செய்ய வேண்டும்.
காரணம் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் மாநிலத் தேர்தல் தொடக்க காலம் முதல் இதனை வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular