Tuesday, July 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஐரோப்பிய ஒன்றிய பேராளர் குழுவினர் திராங்கானு மந்திரி பெசாருடன் சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றிய பேராளர் குழுவினர் திராங்கானு மாநில அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு திராங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சம்சுரி மொக்தார் தலைமையேற்றார்.
இங்கு விஸ்மா டாருல் இமானில் நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரர்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.


திராங்கானு மாநிலத்தில் பொருளாதாரம், சுற்றுலா, கல்வி, புத்தாக்கம் உட்பட பல்வேறு துறைகளில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து சாம்சுரி ஐரோப்பிய பேராளர் குழுவினருக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.
இந்த துறைகளில் உள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஐரோப்பிய குழுவினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
திராங்கானு மாநிலம் பல்வேறு துறைகளில் அபரீத வளர்ச்சி கண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த இரு தரப்பு கலந்துரையாடலில் பல இணக்கங்கள் காணப்பட்டது.


இந்த முக்கிய துறைகளில் உள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள திராங்கானு மாநில அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம் மலேசியாவின் முக்கிய பங்காளியாக இருந்து வருவதால் பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஐரோப்பிய ஒன்றிய பேராளர் குழுவினருக்கு தலைமையேற்ற
H.E.Rafael Daerr-க்கு சாம்சுரி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular