
செனாய் ஜூலை 6
எதிர் வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் செனாய் தொகுதியில் போட்டியிடும் மசீசவை சேர்ந்த தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக மஇகா மகளிர் அணி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது
கூலாய் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள செனாய் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் மசீச புத்ரி பிரிவை சேர்ந்த
கிக்கி தாய் ஒரு இளமையான மற்றும் திறமையான வேட்பாளர் என கூலாய் தொகுதி மஇகா மகளிர் அணி செயலாளர் புவனேஸ்வரி பெருமாள் (தமிழச்சி) கூறினார்.
இந்த தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றிக்கு கட்சியின் மகளிர் அணி வியூகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக ஜொகூர் மஇகா மகளிர் அணி நிர்வாகச் செயலாளர் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்திய வாக்காளர்களின் ஆதரவை திரட்ட வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தை தாங்கள் மேற்கொண்டு வருவதாக தேசிய மஇகா மகளிர் அணியின் கலாச்சார பிரிவின் தலைவியுமான அவர் குறிப்பிட்டார்.

இந்த வட்டார மக்களுக்கு ஒரு இளமையான மற்றும் திறமையான பிரதிநிதி வேண்டும் என்பதால் கிக்கி தாய் தான் சிறந்த தேர்வு என்றார் அவர்.
இவ் வட்டாரத்தில் உள்ள இந்திய வாக்காளர்கள் குறிப்பாக பெண் வாக்காளர்கள் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் திரண்டு வந்து இவருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியின் தலைமைத்துவம் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருவதால், இந்திய சமூகத்தின் ஆதரவு தேசிய முன்னணிக்கு தான் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


