
எதிர் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவிருக்கும்ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் கைவசம் இருக்கும் பெர்லிங் சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றும் என மஇகா உதவி தலைவர் டத்தோ அசோஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த தொகுதியை கைப்பற்ற இத்தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளரான மஇகாவின் பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக அவர் சொன்னார்.
தமது தலைமையிலான தேர்தல் இயந்திரம் வியூகத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர்களை அடையாளம் காண்பதிலும் அணுகுவதிலும் கட்சியின் தேர்தல் இயந்திரம் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக முன்னாள் காம்பீர் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
எதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவருக்கும் இந்த தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக இந்திய வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த தொகுதியில் மலாய்காரர் மற்றும் சீன வாக்காளர்கள் சம நிலையில் உள்ளனர்.
இந்த தொகுதியில் சுமார் 14 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.
ஆகையால் இந்தத் தொகுதியின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் தான் முடிவு செய்வர் என்றார் அவர்.
ஆகையால் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு தங்களின் பிளவுபடாத ஆதரவை தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஜொகூர் மாநில தேசிய முன்னணி இம்மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு அதிகமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகையால் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்களை இந்திய சமூகத்தினர் நம்பி விடக்கூடாது என அவர் நினைவுறுத்தினார்.


