
முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் விடுதலையில் ஜொகூர் மாநில தேசிய முன்னணி தலையிடவில்லை என மஇகா உதவி தலைவர் டத்தோ டி. முருகையா தெளிவு படுத்தினார்.
வாக்காளர்களை பயமுறுத்தும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டு இது என்றார் அவர்.
அரச மன்னிப்பு அரசியல் கட்சிகளின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் மன்னிப்பு வாரியத்திற்கு மட்டுமே உச்ச அதிகாரம் உள்ளது என்பதை தவிர தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி அல்ல என அவர் தெளிவுப்படுத்தினார்.

ஆகையால் ஜொகூர் தேர்தலில் தேசிய முன்னணிக்கு பெரிய வெற்றி கிடைத்தால், நஜீப் விடுதலை செய்யப்படுவார் என்று கூறி மக்களை பயமுறுத்த வேண்டாம் என அவர் நினைவு படுத்தினார்.
இந்த விவகாரத்தில் தேசிய முன்னணி அல்லது இதர அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் எதுவும் கிடையாது என அவர் தெளிவுப்படுத்தினார்.
ஜொகூர் மாநில அரசியலில் அரச குடும்பம் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் சொன்னார்.
எதிர்க்கட்சிகள் இந்த பொய் தகவல்களை மக்கள் எளிதில் நம்பி விடக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இரவு ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.


