
மஇகாவின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் இன்று ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை மஇகா மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஜொகூர் மாநிலத்தில் பெர்லிங் சட்டமன்ற தொகுதியில் இந்த மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியம் கூறினார்.
இந்த மருத்துவ முகாமில் கட்சியின் உதவித் தலைவர்கள் டத்தோ முருகையா மற்றும் டத்தோ அசோஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த மருத்துவ முகாம் இங்கு நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பெர்லிங் சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி பிரதிநிதித்து பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
இவரின் வெற்றியை உறுதி செய்ய மஇகா தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இங்குள்ள இந்திய சமூகத்தின் ஆதரவு கட்சிக்கு அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் கட்சி 4 தொகுதிகளில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.
கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.



