
தற்போது தினமும் சமூக வலைதளத்தில் இனம், சமயம் மற்றும் அரசு குடும்பம் சம்பந்தப்பட்ட 3R விவகாரம் தலை தூக்கி வருவதாக தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யனேஸ்வரன் ராமராஜ் சுட்டி காட்டினார்.
இந்த விவகாரத்தில் நாம் எளிதாக கருதி விட முடியாது. காரணம் பல இனங்கள் வாழும் இந்நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை இது பாதிக்கும் என்றார் அவர்.
காரணம் ஒவ்வொரு சமூகத்தில் மொழி, வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்து மக்களிடையே குறிந்த புரிந்துணர்வு காரணமாகத் தான் இப்பிரச்சனை உருவெடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மொழி ஒரு தொடர்பு கருவி மட்டுமல்லாமல், ஒரு இனத்தின் அடையாள சின்னம் என்றார் அவர்.
ஆகையால் ஒரு மொழியின் பின்னணியை முறையாக தெரிந்து கொள்ளா விட்டால் சமூகத்திடையே கருத்து வேறுபாடு மற்றும் மன கசப்பு உருவாகும் சூழ்நிலை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு 2026 அனைத்துலக தாய்மொழி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பேசினார்.
குறிப்பாக இளைய தலை சந்ததிகளுக்கிடையே தாய்மொழி புரிந்துணர்வை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.
மலேசியாவில் 130 மொழிகள் உள்ளன.
இது நமது நாட்டில் பாரம்பரிய வளமாகும்.
இந்த பன்முகத்தன்மை தான் நமது பலமாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்திய குடும்பத்தை சேர்ந்த தாம் சீன பள்ளியில் படித்து, தாய்மொழியில் முழுமை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பல மொழிகளை கற்றுக் கொள்வதால், அது நமக்கு ஒரு பலம் தான் என அவர் தெரிவித்தார்.


