Friday, June 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை குணா கேட்டறிந்தார்!

சிரம்பான் ஜெயா வட்டார மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ப. குணசேகரன் கேட்டறிந்தார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் உள்ள தமது சேவை மையத்தில் வட்டார மக்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாங்கள் எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சனைகளை இவர்கள் முன் வைத்தனர்.
சிரம்பான் ஜெயா வட்டார மக்கள் எதிர் பிரச்சினைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காணப்படும் என குணா உறுதியளித்தார்.
இந்தத் தொகுதியில் அனைத்து சமூகத்தினரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்கப்படும் என்றார் அவர்.
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் சொன்னார்.


மக்களுடன் நேரடி சந்திப்பு நடத்தினால் மட்டுமே, மக்களின் குறைகள் என்ன என்பதை அரசியல் தலைவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.
மாநில மடானி அரசாங்கம், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை அமலாக்கம் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் எதிர் வரும் மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் நடப்பு அரசாங்கத்திற்கு பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என குணா கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular