
இங்கு போரஸ்ட் ஹொய்டில் மை காள்சார் பாலர் பள்ளி விளையாட்டுப் போட்டியை சிராம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ப. குணசேகரன் தொடக்கி வைத்தார்.
இந்த விளையாட்டுப் போட்டி பெய் ஹூவா சீன ஆரம்பப் பள்ளியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
போரஸ்ட் ஹொய்டில் பாலர் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த டத்தோ குணா வற்றாத ஆதரவை வழங்கி வருவதாக மை காள்சார் நிறுவனர் சங்கரத்னா டாக்டர் வி. கந்தசாமி கூறினார்.
பாலர் பள்ளி கல்வியின் வளர்ச்சிக்கு டத்தோ குணாவின் பங்கு மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று என்றார் அவர்.

இதனிடையே மை காள்சார் நிர்வாகம் இந்த பாலர் பள்ளியை வெகு சிறப்பாக நடத்தி வருவதாக தமதுரையில் டத்தோ குணா கூறினார்.
டாக்டர் கந்தசாமியின் தலைமையின் கீழ் இந்த பாலர் பள்ளி வெகு சிறப்பாக இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு இளம் வயதிலேயே இது போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் மாணவர்களின் கல்வியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சொன்னார்.
மாநில மக்களின் மேம்பாட்டிற்கு இந்த அரசாங்கம் அதிக கவனத்தை செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.



