
எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகா 4 தொகுதிகளில் போட்டியிடும் என ஜொகூர் மாநில மஇகா தலைவர் ராவீன் குமார் கூறினார்.
கட்சி போட்டியிடவிருக்கும் தொகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு செய்யப்படும் என தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
தற்போது மஇகா வசம் தெங்காரோ உட்பட கெமெலா(சரஸ்வதி) மற்றும் காஹாங்
(நித்தியானந்தன்) ஆகிய 3 தொகுதிகள் உள்ளது.
கடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் புக்கிட் பாத்து தொகுதியில் கட்சியின் எஸ். சுப்பையா பாக்காத்தான் ஹராப்பானின் அர்த்தர் சியோங்கிடம் 137 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
மாநிலத்தின் 16 ஆவது தேர்தலுக்கு வழி விடும் வகையில் நேற்று முன்தினம் ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
ஜொகூரில் 56 தொகுதிகளில் தேசிய முன்னணி 40 தொகுதிகளை கொண்டுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி 56 தொகுதிகளில் போட்டியிடும் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி அறிவித்துள்ளார்.
இவற்றில் குறைந்தது 40 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


