Thursday, May 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியான் லுங் திரங்கானு மந்திரி பெசாருடன் பேச்சுவார்த்தை

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியான் லுங் இன்று திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சாம்சுரி மொக்தாருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பொருளாதார துறையிகளில் மூலதன ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
முக்கிய துறைகளில் ஏற்கனவே இருந்து வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக பேசப்பட்டது.
திரங்கானு செஜாத்ரா மாஸ்டர் பிளான்(PITAS 2030) உள்ள வளர்ச்சி இலக்குகளை பகிர்வதில் இந்த பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டது.
மேலும் திரங்கானு தனது பசுமை திறன்களை இந்த சந்திப்பில் வெளிப்படுத்தியது.
கென்யிர் ஏரியில் அமைந்துள்ள Hybrid Hydro Floating Solar
(HHF) திட்டம் மலேசியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் நிலையமாகும். இதன் மொத்த உற்பத்தி திறன் 2.5 GW ஆகும். இந்தத் திட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டது.


Terengganu Silica Valley மற்றும் கிழக்குக்கரை ரயில் திட்டம்(ECRL) மற்றும் கெமாமான் துறைமுகம் போன்ற அடிப்படை வளர்ச்சிகள் திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.
மலேசியாவின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக சிங்கப்பூர் இருப்பதால், சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக பேசப்பட்டது.
விஸ்மா டாருல் இமான் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தை திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சாம்சுரி மொக்தார் தலைமையில் நடைபெற்றது.
இரு தரப்புக்கும் இடையே இருந்து வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
திரங்கானு மாநிலம் பசுமை, பொருளாதாரம் மற்றும் உயர்தர தொழில்நுட்பத் துறைகளில் நிலையான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் முக்கிய கிழக்குக்கரை நுழைவாயிலாக கருதப்படுகிறது.
பாசார் பெசார் கெடாய் பாயாங் மற்றும் கோலா திரங்கானு பாலும் ஆகிய சுற்றுலா மையங்களுக்கு சிங்கப்பூர் பேராளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிங்கப்பூர் பேராளர்களே மூத்த அமைச்சரின் துணைவியார் ஹோ சிங், சட்டத்துறை அமைச்சர் எட்வின் தோங், வெளியுறவு அமைச்சின் இணை அமைச்சர் சுல்கார்மைன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேய்ரா, மலேசியாவிற்கான சிங்கப்பூர் தூதர் வானு கோபால மேனன் ஆகியோர் இடம் பெற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular