
ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் X8 சீரிஸ்- X8 மற்றும் X8 ப்ரோ மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 உள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள X8 சீரிஸ் மாடல்கள் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒப்போ தெரிவித்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஃபைண்ட் X8 மாடலில் 6.59 இன்ச் 1.5K AMOLED LTPO பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபைண்ட் X8 ப்ரோ 6.78 இன்ச் 2K மைக்ரோ எல்இடி AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.


