
அண்மையில் சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிய பாகிஸ்தான் நாட்டு கைதி ஒருவரை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு வெ5,000 சன்மானம் வழங்க தாம் முன் வருவதாக கெப்போங் எம்பி லிம் லிப் எங் கூறினார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி மாற்றும் நேரத்தில் அந்த கைதி தப்பி ஓடி ஒரு வாரம் கடந்தும், இன்னும் அந்த கைதியை கண்டுபிடிக்காதது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர்.
தலைமறைவாக இருந்து வரும் இந்த கைதி மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு வர சரியான தகவல் தந்து கைது செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு வெ5,000 சன்மானமாக தாம் வழங்கத் தயார் என்றார் அவர்.
அந்த கைதி தப்பி ஓடியது ஒரு சிறிய விவகாரம் அல்ல, அடிப்படை பாதுகாப்பில் ‘கடுமையான முறிவு’ என அவர் சொன்னார்.
‘முழுமையான பாதுகாப்பில் உள்ள ஒரு கைதி மாற்ற நேரத்தின் போது எப்படி எளிதாக தப்பி ஓடி இருக்க முடியும்’ என அவர் கேள்வி எழுப்பினார்.
கடுமையான பாதுகாப்பு சுற்றுச்சூழலில் இந்த சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும் என அவர் மேலும் வினவினார்.
‘இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு. சம்பம் நடந்து நாட்கள் கடந்தும் ஏன் இன்னும் தெளிவான விளக்கம் தரப்படவில்லை’ என்றார் அவர்.
தப்பி ஓடிய முகமட் ஹசானை(வயது 24) கண்டுபிடிக்க போலீஸ் மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகளுடன் தாங்கள் ஒத்துழைத்து வருவதாக கடந்த ஏப்ரல் 10 ஆம் தெறி சிறைச்சாலை இலாக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரு சிறார் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் மற்றும் குடிநுழைவு குற்றச்சாட்டுகளை அந்த பாகிஸ்தான் கைதி எதிர் நோக்கி வருகிறார்.


