
தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை தொடர்ந்த போதிலும் மக்களுக்கு பயணம் அணுகக்கூடிய மற்றும் மலிவானதாக இருப்பதற்கு முன்னெடுப்பாக ‘அமைதிக்கு ஒரு வாய்ப்பளிப்போம்’ பிரச்சாரத்தை ஏர் ஆசியா தொடங்கியது.
இதனிடையே மத்திய ஆசியாவில் போர் நிறுத்தம் முடிவு குறித்து தாங்கள் நிம்மதியடைவதாக ஏர் ஆசியா இணை நிறுவனர் டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
மக்களை இணைப்பதில் தான் ஏர் ஆசியா முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பிரதான நோக்கில் தான் ஏர் ஆசியா விமான நிறுவனம் நிறுவப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 25 ஆண்டுகளாக சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் மக்களை அணுக்கமாக கொண்டு வருவதிலும் இந்த உலகை ஒன்றிணைக்க ஏர் ஆசியா முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மக்கள் மற்றும் சமூகங்களுக்கிடையே அமைதியை வளரச் செய்ய பயணம் பிரதானமாக விளங்குகிறது என்றார் அவர்.
இந்த நிலையில் அமைதியை உற்சாகப்படுத்த மலிவான கட்டணம்
ஊக்குவிப்பாக அமைவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இப்பொழுது இந்தப் பிரச்சாரம் ஆழ்ந்த அர்த்தத்தை நமக்கு தருகிறது.
ஆக மொத்தமாக அமைதியை தேடித் தான் நாம் அனைவரும் செல்கிறோம்.
மக்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே அமைதி மற்றும் நமது வாழ்க்கையில் அமைதி இவை தான் நமக்கு பிரதானம் என அவர் சொன்னார்.
இவற்றின் அடித் தளத்திற்கு பயணம் தான் ஒரு வழித்தடமாக இருந்து வருகிறது.
மக்கள் ஒன்றிணைய, புதிய இடங்களைக் காண, ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ள, ஒரு புதிய இடத்தில் பெருமூச்சு விட இந்த பயணம் தான் பிரதான வழித்தடம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த இணைக்கும் பாலம் ஆடம்பரமாக இருக்கக் கூடாது.
‘அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்கவும் உலகை இணைக்கவும்’ ஏர் ஆசியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
ஏர் ஆசியா தனது விரிவான வழித்தடங்களுக்கு நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பயண சேவைகளுக்கு வெ59 முதல் சிறப்பான கட்டணங்களை வழங்குகிறது.
குறுகிய தூர விமான பயணமான ஜொகூர் பாரு, பினாங்கு, ஹோ சி மின் சிட்டி,புக்கெட்,
சென்ஜன்,வூஹான் மற்றும் திருவேந்திரம் உள்ளிட்டு நகர்களுக்கு இந்த கட்டணத்தில் பயணிகள் டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
இந்த சிறப்பு கட்டணத்தில் நீண்ட தூர பயன நகர்களான தைப்பே,ஒசாகா,
சியோல்,சாங்ஷா,
செங்டு, புது டெல்லி,
மெல்போர்ன் மற்றும் சிட்னி உட்பட இன்னும் பல நகர்களுக்கு பயணிகள் பயணம் செய்யலாம்.
பயணிகள் இந்த சிறப்பு கட்டணத்துக்கு இப்பொழுது முதல் 14 ஏப்ரல் 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான பயண காலம் 20 ஏப்ரல் 2026 முதல் 27 மார்ச் 2027 வரையாகும்.
எதிர்வரும் உங்களின் விடுமுறை பயணத்தை திட்டமிட உங்களுக்கு போதுமான கால அவகாசம் உள்ளது.
AirAsia MOVE செயலி அல்லது airasia.com இணையதளத்தின் வழி பயணிகள் டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
இந்த சிறப்பு கட்டணங்கள் ஒரு வழி பயணத்திற்கு மட்டும்தான். இவை நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.


