
ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் நிர்வாக அதிகாரமற்ற தலைவராக டான்ஶ்ரீ ஜமாலுடின் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆக்சியாட்டா குழும நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான இவரின் இந்த நியமனம் உடனடியாக அமலாக்கத்திற்கு வருகிறது.
விமான போக்குவரத்து குடும்பத்தின் ஒருங்கிணைப்பை தொடர்ந்து இவரின் இந்த நியமனம் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது.
ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இந்த நியமனம் ஒரு முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
இந்த குழும நிறுவனத்தின் ஒருங்கிணைப்பை தொடர்ந்து இதன் இயக்குனர் வாரிய உறுப்பினர்கள் மைய பங்கை ஆற்றுவார்கள்.
இதனிடையே ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் தலைவராக டான்ஶ்ரீ ஜமாலுடின் இப்ராஹிம்மின் நியமனத்தை தாங்கள் பெரிதும் வரவேற்பதாக ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
இவரின் பல நிலையிலான தலைமைத்துவ ஆற்றல் மற்றும் அனுபவம் ஏர் ஆசியா எக்ஸ் குழுமத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் செல்லும் என அவர் சுட்டிக் காட்டினார்.

நமது குழும நிறுவனத்தின் விற்பனை சந்தை விரிவாக்கத்திற்கு இவரின் தலைமைத்துவ அனுபவம் பெரிதும் துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவரின் ஆற்றல் மற்றும் விரிவான அனுபவம் ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும் என அவர் குறிப்பிட்டார்.
ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இவருடன் தாங்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என்றார் அவர்.
அதே வேளையில் இந்த குழும நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வந்த டத்தோ’ பாம் லீ யீ, இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
டத்தோ’ பாம் லீ தலைமைத்துவத்தின் கீழ் இந்த குழும நிறுவனம் துரித வளர்ச்சியை கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர் தொடர்ந்து இயக்குனர் வாரியத்தில் ஒரு பகுதியாக இவர் நீடிப்பதில் தாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்தக் குழுமத்தின் முக்கிய காலகட்டங்களில், நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வந்ததில் தாம் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக ஏர் ஆசியா எக்ஸ் நிர்வாக இயக்குனரான டத்தோ’ பாம் லீ தெரிவித்தார்.
இந்த குழுமத்தின் நிர்வாக இயக்குனர் என்ற நிலையில் தொடர்ந்து தமது ஒத்துழைப்பு வழங்கப் போவதாக அவர் சொன்னார்.
இந்நிறுவனத்தின் தொடர் வளர்ச்சிக்கு முழுமையாக செயல்பட போவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக டான்ஶ்ரீ ஜமாலுடின் இப்ராஹிம் கூறினார்.
இந்த பெரிய குழும நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை தாம் வழங்க தயார் என அவர் சொன்னார்.
ஒரு குழுமத்தின் கீழ் விமான நிறுவனங்களை ஒருங்கிணைப்பதில் வெற்றி கண்டுள்ளது மாபெரும் சாதனை என்றார் அவர்.
தமது பங்கு மற்றும் அர்ப்பணிப்பு இந்த குழுமத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


