
சுபாங் அக் 29
முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் தனது சிக்கன தளர்வு கட்டண பயணிகளுக்கு இலவச உணவு, தின்பண்டங்கள் மற்றும் பானங்களை வழங்கி மகிழ்விக்க உள்ளது.
மேலும் தனது சிக்கன தளர்வு கட்டண பயணிகளுக்கு பயணப்பெட்டிகள் அலாவன்ஸ் மற்றும் இதர சலுகைகளையும் பாத்திக் ஏர் வழங்கவிருக்கிறது.
தனது பயணிகளின் தேவைகள் அதிகரிப்பை தொடர்ந்து எதிர்வரும் 1 நவம்பர் 2024 ஆம் தேதி முதல் தனது அனைத்து பயணிகளுக்கும் பாத்திக் ஏர் இந்த சலுகைகளை வழங்கவிருக்கிறது.
இலவச உணவு மற்றும் பானங்களுடன், உள்நாட்டு பயணிகளுக்கு 20 கிலோ கிராம் பயண பெட்டிகள் அலாவன்ஸ் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு 30 கிலோ கிராம் பயண பட்டிகள் அலாவன்ஸ் ஆகிய சலுகைகளை பாத்திக் ஏர் வழங்குகிறது.
இதனிடையே தனது பயணிகளுக்கு முழுமையான மற்றும் தரமான சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த அதிகமான சலுகைகள் வழங்கப்படுவதாக பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குவது மட்டுமின்றி அந்த பயணம் பயணிகளுக்கு சந்தோஷமான பயணமாக இருக்க வேண்டும் என்பதை எங்களின் இலக்கு என அவர் குறிப்பிட்டார்.

பயணிகளின் தேவைகளை கேட்டு அறிந்து இது போன்ற சலுகைகளை தாங்கள் வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பாத்திக் ஏரின் உள்நாட்டு மற்றும் அனைத்துலக போயிங் 737 ரக விமானங்களில் இந்த சலுகைகள் வழங்கப்படும் என அவர் சுட்டிக் காட்டினார்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா மற்றும் உஸ்பெகிஸ்தானின் தாஸ்கனுக்கான ஏர்பஸ் 320 விமானங்களிலும் முழுமையான சேவைகள் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தனது உள்நாட்டு மற்றும் அனைத்து உலக விமான பயணிகளுக்கான தரமான சேவை உறுதி செய்வதில் பாத்திக் ஏர் எப்பொழுதுமே முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இன்னும் பல புதிய நகர்களுக்கு சிறகடிக்க பாத்திக் ஏர் வியூகத் திட்டங்களை வகுத்து வருவதாக டத்தோ சந்திரன் ராம மூர்த்தி குறிப்பிட்டார்.


