
சபா பெர்சாத்துவை வழிநடத்துவதில் தோல்வி கண்டுள்ள ரோனால்ட் கியாண்டி தமது தோல்வியிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் சாடினார்.
கட்சியின் சபா மாநில தலைவரான கியாண்டி, கட்சியை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தவறிவிட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இவரின் தலைமைத்துவத்தின் கீழ் சபா பெர்சாத்து மிகவும் பலவீனம் அடைந்து விட்டதாக அவர் சொன்னார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த சபா மாநில சட்டமன்ற தேர்தலில் சபா பெர்சாத்து ஒரு தொகுதியை கூட கைப்பற்ற தவறிவிட்டது. இந்த படுதோல்விக்கு கியாண்டி தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.
இந்த நிலையில் பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பதவி விலக வேண்டும் என்ற இவரின் கோரிக்கை அடிப்படையற்றது.
உண்மையிலேயே கியாண்டி தான் தமது கட்சி பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என சஞ்சீவன் வலியுறுத்தினார்.
கட்சியின் தலைமைத்துவத்தைப் பற்றி குறை கூற இவர் சற்றும் தகுதியற்றவர் என அவர் தெரிவித்தார்.
பெர்சாத்து கட்சி வலிமை அடைந்து மத்திய அரசாங்கத்தை தலைமையற்றதற்கு டான்ஶ்ரீ முஹிடின் தான் முக்கிய காரணம் என்பதை இவர் உணர தவறிவிட்டார் என அவர் சொன்னார்.
மாநில அளவில் கட்சியை வழிநடத்த தகுதியற்ற இவர், தலைமைத்துவத்தை பற்றி குறை கூற அறுகதியற்றவர் என அவர் சுட்டி காட்டினார்.
தமது பலவீனத்தை மூடி மறைக்க தலைமைத்துவத்தின் மீது பழி சுமத்தும் முயற்சியில் கியாண்டி ஈடுபட்டு வருவதாக சஞ்சீவன் சாடினார்.


