Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தைப்பூச கொண்டாட்டத்தின் போது அதிகமான நகைகளை அணிந்து செல்லாதீர்-பெண்களுக்கு ஆலோசனை!

பினாங்கு பிப் 1
நாளை முதல் தொடங்கவிருக்கும் தைப்பூச திருவிழா கொண்டாட்டத்தின் போது அதிகமான நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.
தைப்பூச கொண்டாட்ட நெரிசலின் போது தான் திருடர்கள் தங்களின் கைவரிசையை காட்டும் தருணம் என தேசிய குற்ற தடுப்பு அரவாரியத்தின் உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத்தின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன் நினைவுறுத்தினார்.
இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சூழ்நிலையில் நகை விலை உச்சத்தை அடைந்துள்ளது. ஆகையால் இயன்றவரை அதிகமான நகைகளை இந்த தைப்பூச கொண்டாட்டத்தின் போது அணிந்து செல்வதை நமது இந்திய பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அறிக்கையின் படி இவ்வாண்டு பினாங்கு மாநில தைப்பூச கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் அங்கு செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார் அவர்.
கைக்குழந்தைகள் மற்றும் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மிகப் பாதுகாப்புடன் அவர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
தைப்பூசம் என்பது சமயம் மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட திருவிழாவாகும்.
இந்த கொண்டாட்டத்திற்கு செல்லும் நமது இந்துக்கள் பாரம்பரிய உடையுடன் சென்று பக்தி உணர்வுடன் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக நமது இந்திய இளைஞர்கள் சினிமா பாடல்கள் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை தவிர்த்து கொள்ள வேண்டும்.
இந்த கொண்டாட்டத்தின் போது அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் கலந்து கொள்வார்கள் என்பதால், கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை போடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுவட்டாரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த தைப்பூசம் கொண்டாட்டத்தில் அதிகமான மக்கள் நெரிசல் ஏற்படும் என்பதால், காவல்துறையினரின் கட்டளைகளை பின்பற்று மாறு அவர் ஆலோசனை கூறினார்.
காவல் துறைகள் மற்றும் ஆலய நிர்வாகங்களின் நிபந்தனைகளை பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நல்ல ஒரு சிறந்த தைப்பூசத்தை பக்தி உணர்வோடு கொண்டாடுமாறு அவர் ஆலோசனை கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular