
விரைவில் கொண்டாடப்படவிருக்கும் சீன புத்தாண்டு காலத்தில் தங்களின் குடும்பத்தாருடன் மீண்டும் இணைய பயணிகளுக்கு பாத்தேக் ஏர் நிர்ணயிக்கப்பட்ட விலை கட்டணங்களை அறிவித்துள்ளது.
நாட்டின் மிக ப் பரபரப்பான பயண காலங்களில் ஒன்றான சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மலேசியர்கள் நாடு முழுவதும் அலைச்சலின்றி மலிவான கட்டணத்தில் பயணம் செய்ய பாத்தேக் ஏர் இந்த முன்னெடுப்பை செய்துள்ளது.
குடும்பத்தாருடன் மீண்டும் இணைய இலட்சக்கணக்கானோர் இந்த கொண்டாட்ட காலத்தில் தங்களின் இல்லங்களுக்கு திரும்புவதால், டிக்கெட் பதிவுகள் நெரிசல் எதுவும் இல்லாமல், மலிவான கட்டணத்தில் பயணம் செய்ய பாத்தேக் ஏர் இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் கீழ் பயணிகள் கோலாலம்பூர் அல்லது சுபாங்கிலிருந்து கூச்சிங்கிற்கு ஒரு வழி பயண கட்டணம் வெ318-லிருந்து தொடங்குகிறது. கோத்தா பாலுவிற்கு வெ378-லிருந்து தொடங்குகிறது.
இதற்கான டிக்கெட் பதிவிற்கான காலம் இப்பொழுதிலிருந்து 13 பிப்ரவரி 2026 முடிவடைகிறது.

இதற்கான பயண காலம் 13 பிப்ரவரி முதல் 16 பிப்ரவரி வரையாகும்.
இந்த பரபரப்பான பயண காலத்தில் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கூடுதல் விமான சேவைகளை பாத்தேக் ஏர் ஏற்பாடு செய்துள்ளது.
ஜொகூர் பாருவிருந்து பினாங்கிற்கு பிப்ரவரி 12 முதல் 14 பிப்ரவரி 2026 வரையிலும், சீபுவிற்கு பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரையிலும் இந்த கூடுதல் விமான சேவைகள் தயார் படுத்தப்பட்டுள்ளது.
பினாங்கிற்கு வெ388 மற்றும் சீபுவிற்கு வெ588 கட்டணம் தொடங்குகிறது.
இதனிடையே இந்த பிரதான கொண்டாட்ட காலத்தில் பயணிகளின் பெரும் சுமையை குறைக்க இந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வழங்கப்படுவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
‘குடும்பத்தாருடன் மீண்டும் இணைய’ பாத்தேக் ஏரின் இந்த பிரச்சாரம், தங்களின் குடும்ப உறுப்பினர்கள் தடையின்றி வீடு வந்து சேர்வர் என்பதை உறுதி செய்யவே என்றார் அவர்.
இந்த காலக் கட்டத்தில் பாத்தேக் ஏர் நியாயமான மற்றும் மலிவான கட்டணங்களை வழங்குவதால், பயணிகள் தங்களின் பயணத்தை எளிதாக திட்டமிட்டு கொள்ளலாம் என்றார் அவர்.
அதே வேளையில் தங்களின் பயணங்களை மேலும் எளிதாக்கிக்கொள்ள இந்த பரபரப்பான பயண காலத்தில் கூடுதல் விமான சேவைகளை பாத்தேக் ஏர் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கொண்டாட்ட காலத்தில் குடும்பங்கள் ஒன்றிணைய, மகிழ்ச்சியுடன் கொண்டாட பாத்தேக் ஏர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த கொண்டாட்ட காலத்தில் பயணத்தை எளிதாக மற்றும் சமூக ஒருங்கிணைப்பிற்கு பாத்தேக் ஏர் தனது சிறப்பான சேவைகளின் மூலம் முக்கிய பங்காற்றி வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
சீன புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் குடும்பத்தாருடன் மீண்டும் இணைய பாத்தேக் ஏர் வழங்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விலை மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என நேற்று தலைநகரில் இந்த நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
சபா மற்றும் சரவாக் உட்பட மலேசியா முழுவதும் இந்த கொண்டாட்ட காலத்தில் பயணிகள் பாத்தேக் ஏரின் ஏற்புடைய மற்றும் மலிவான கட்டணத்தில் சிறகடிக்கலாம் என்றார் அவர்.
இதனிடையே மாணவர்களுக்கு பயணத்தை எளிதாக்க ‘பாத்தேக் மாணவர் திட்டத்தை’ பாத்தேக் ஏர் தொடங்கியுள்ளதாக டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இந்த புதிய ஆண்டு முழுவதும் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் சிறப்பு கழிவு கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அவர் சொன்னார்.
குறிப்பாக மாணவர்களுக்கு இந்த திட்டம் பயண அனுபவத்தை தருவதோடு அவர்களுக்கு உற்சாகத்தை தரும் என்றார் அவர்.
உங்கள் அடுத்த பயணத்தை திட்டமிடவும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும் பாத்தேக் ஏர் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது www.batikair.com இணையத்தை வலம் வரலாம். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜானா சந்திரன் முனியன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்


