
நேற்று பாத்தேக் ஏர் விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்ட ஐயப்ப சுவாமி யாத்ரிக பயண பக்தர்களுக்கு பிரபல என்ரிக்கோ’ஸ் நிறுவனம் நெய் டின்கள் வழங்கி வழியனுப்பியது.
ஐயப்ப சுவாமி தரிசனத்திற்கு நெய் மிக அவசியம் என்பதால் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு தங்களின் நிறுவனம் நெய் டின்களை வழங்கியதாக என்ரிக்கோ’ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் வி. ராஜேந்திரன் கூறினார்.
நேற்று மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் பாத்தேக் ஏர் விமான நிறுவனம் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு வழியனுப்பும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சிறப்பு வழி அனுப்பும் நிகழ்ச்சியில் என்ரிக்கோ’ஸ் நிறுவனம் பங்கு பெற்றது.
நாளை மற்றும் நாளை மறுநாள் யாத்திரிக பயணத்திற்கு புறப்படும் சுமார் 200 பக்தர்களுக்கு தங்களது நிறுவனம் நெய் டின்களை வழங்கும் என ராஜேந்திரன் தெரிவித்தார்.
யாத்திரிக பயணிகளுக்கு இந்த அன்பளிப்பை வழங்குவது தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
என்ரிக்கோ’ஸ் நிறுவனம் தொடர்ந்து இது போன்ற உதவிகளை வழங்கி வரும் என அவர் குறிப்பிட்டார்.

என்ரிக்கோ’ஸ் நிறுவனம் இது போன்ற பல சமூகப் பணிகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் என்ரிக்கோ’ஸ் நிறுவனத்தின் அதிகாரி பிரேமா கலந்து கொண்டார்.


