Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

விடுமுறை கால பயண நெரிசல் என்பதால் ஒன்லைன் செக்-இன் செய்து கொள்ளுங்கள்-பாத்தேக் ஏர் ஆலோசனை!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விடுமுறை காலம் என்பதால் ஒன்லைன் செக்-இன் செய்து கொள்ளுமாறு பாத்தேக் ஏர் தனது பயணிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
ஒன்லைன் செக்-இன் மூலம் போர்டிங் பாஸ்களை பெற்றுக் கொண்டால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய குடிநுழைவுத் துறையில் பயணிகள் தடையின்றி எளிதாக பயணிக்க முடியும் என பாத்தேக் ஏர் அறிக்கை ஒன்றில் கூறியது.
பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தடைவதற்கு முன்னரே இந்த ஒன்லைன் செக்-இன் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாகவே பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும்.
காரணம் இது இரட்டை விடுமுறை காலம் என்பதால் விமான நிலையம் மற்றும் குடி நிறைவுத்துறையில் கடுமையான நெரிசலை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என அந்த அறிக்கை கூறியது.
விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை உட்பட பல்வேறு நடைமுறைகள் இருப்பதால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்தை வந்தடைவது மிக முக்கியமாகும்.
ஆகையால் இந்த விவகாரத்தில் விமான பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.
இந்த இரட்டை விடுமுறை காலத்தில் தடையின்றி பயணம் செய்ய பயணிகள் அவசியம் இந்த நடைமுறையை கையாள வேண்டும் என பாத்தேக் ஏர் ஆலோசனை கூறியது.
தனது பயணிகள் தடையின்றி பயணம் செய்வதை பாத்தேக் ஏர் முக்கியத்துவம் அளித்து வருவதாக அந்த அறிக்கை கூறியது.
கூடுதல் தகவல்களுக்கு பாத்தேக் ஏர் மொபைல் செயலி அல்லது www.batikair.com அகப்பக்கத்திற்கு வலம் வரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular