
சிம்பாங் பூலாய் கேமரன்மலை செல்லும் சாலையில் 43.4 வது கிலோ மீட்டரில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆகையால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சாலையின் மறுசீரமைப்பு பணிகள் பொருட்டு இச் சாலை நேற்று மாலை 5.00 மணிக்கு மூடப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ்படை தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் ஆபிடின் அபாங் அமாட் கூறினார்.
இச்சம்பவம் பேராக், பகாங் மாநில எல்லையில் ஏற்பட்டுள்ளது. தற்போது இச் சாலையில் துப்புரவு, மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி விட்டன.
ஆகையால், பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.
மேலும் இப்பகுதியில் மண்சரிவு நில அதிர்வுகள் இருந்து வருவதால் இந்த சாலையை போலீஸ்தரப்பினர் முழுமையாக மூடிவிட்டனர்.
உங்களின் பயணத்தை திட்டமிட்டு் மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. அத்துடன் முழுமையான சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் சாலையை பயன்படுத்த அறிவிப்புகள் வெளியான பின் சாலையை பயன்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.


