Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உலகளாவிய மலிவு கட்டண தலைமைத்துவ விருதை ஏர் ஆசியா வென்றது!

பஹ்ரைனில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகள் விழாவில் உலகளாவிய மலிவு கட்டண தலைமைத்துவ விருதை ஏர் ஆசியா வென்று சாதனை படைத்தது.
தொடர்ந்து 13 ஆவது முறையாக உலகளாவிய மலிவு கட்டண தலைமைத்துவ விருதை ஏர் ஆசியா வென்றது.
மேலும் இந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஏர் ஆசியா எக்ஸ் 3 ஆவது முறையாக உலகின் முன்னணி நீண்ட தூர மலிவு கட்டண விமான நிறுவனம் மற்றும் 9 ஆவது முறையாக உலகின் முன்னணி மலிவு கட்டண விமான பணியாளர்கள் விருதுகளையும் ஏர் ஆசியா பெற்று சாதனையை ஏற்படுத்தியது.
கடந்த அக்டோபரில் நடைபெற்ற ஆசியா மற்றும் ஓசியானியா உலக பயண விருதுகள் விழாவில் ஏர் ஆசியா சிறந்த சாதனையை பெற்ற வேளையில் இந்த உலக தர விருதுகள் இவ்விமான நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த விருதுகள் வழி கண்டங்களில் ஏர் ஆசியா தொடர்ந்து வலிமையாக கால் பதித்து வருகிறது.
இந்த விமான நிறுவனத்தின் அன்றாட பணிகளில் அல்ஸ்டார்கள் செலுத்தி வரும் கவனம் மற்றும் ஈடுபாடு தான் இந்த சாதனைகளுக்கு அடித்தளம் ஆகும்.
இதனிடையே தொடர்ந்து 3 ஆவது முறையாக உலகின் முன்னணி நீண்ட தூர மலிவு கட்டண விமான நிறுவனமாக ஏர் ஆசியா எக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது மாபெரும் சாதனையென ஏர் ஆசியா எக்ஸ்ஸின் தலைமை செயல்முறை அதிகாரி பென்யாமின் இஸ்மாயில் கூறினார்.


கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் ஏர் ஆசியா எக்ஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி பிரதிபலிப்பாக அவர் சுட்டிக் காட்டினார்.
மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உலகளாவிய விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் தொடங்கிய தாஷ்காண்ட் மற்றும் இஸ்தான்புல் நகரங்களுக்கான நேரடி விமான சேவைகள் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எங்களின் நம்பிக்கை கூறிய வாடிக்கையாளர்களுக்கு இன்னும் புதிய அனைத்துலக நகரங்களுக்கு சிறகடிக்க ஏர் ஆசியா எக்ஸ் திட்டம் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நீண்ட தூர மலிவு கட்டணத்தில் பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவதே எங்களின் இலக்கு என்றார் அவர்.


இதனிடையே ‘எங்களின் ஒவ்வொரு அல்ஸ்டார்கள் சின்னத்தின் சீருடைகளில் கால் பதிப்பது இந்த வெற்றிக்கு ஒரு பகுதியாகும்’ என
ஏர் ஆசியா குழுமத்தின் விமான பணியாளர்கள் பிரிவின் தலைவர் சுஹாய்லா ஹாசான் கூறினார்.
ஒவ்வொரு விமானத்திலும் இவர்களின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்க ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
இவர்களின் அர்ப்பணிப்பை எங்களின் வாடிக்கையாளர்கள் மதிப்பளிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஏர் ஆசியா ஒரு குடும்பமாக இயங்கி வழங்கி வரும் தரமான சேவையே இந்த சாதனைக்கு முக்கிய காரணமாகும் என அவர் தெரிவித்தார்.
இது போன்ற உலக தர விருதுகளை ஏர் தொடர்ந்து பெற்று வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே நம்ப முடியாத இந்த மூன்று உருதுகளை பெற்ற ஏர் ஆசியா விமான நிறுவனத்தை தாம் வெகுவாக பாராட்டுவதாக உலக பயண விருதுகளின் நிறுவனர் கிரஹாம் இ கூக் கூறினார்.
ஒரே சமயத்தில் ‘உலகின் முன்னணி மலிவு கட்டண விமான நிறுவனம், உலகின் முன்னணி மலிவு கட்டண விமான பணியாளர்கள் மற்றும் உலகின் முன்னணி மலிவு கட்டண நீண்ட தூர விமான நிறுவனம்’ விருதுகளை பெற்று ஏர் ஆசியா பெரும் சாதனையை ஏற்படுத்தி விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஏர் ஆசியா தடையற்ற மற்றும் உலக பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குவது இந்த சாதனைகளுக்கு பிரதான காரணம் என்றார் அவர்.
ஏர் ஆசியா குழுமத்தின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் இன்னும் புதிய சாதனைகளை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது தொடக்கம் முதல் இது வரை சுமார் 100 கோடி பயணிகளை ஏர் ஆசியா கொண்டுச் சென்றுள்ளது.
ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அதற்கு அப்பாற்பட்ட 130 நகரங்களுக்கு ஏர் ஆசியா சிறகடித்து வருகிறது.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் புதிதாக ஏர் ஆசியா கால் பதித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular