
மஇகா செகாமாட் தொகுதி கட்டிடம் நேற்று அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.
மஇகா செகாமாட் தொகுதிக்கு இது ஒரு வரலாற்றுப் பூர்வ சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் ஜொகூர் மாநில மஇகா தலைவர் ரவீன் குமார் ஆகியோரின் பிளவு படாத ஆதரவு தான் இந்த வெற்றிக்கு காரணம் என்ன மஇகா செகாமாட் தொகுதி தலைவர் எஸ். ஆறுமுகம் கூறினார்.
மேலும் ஜொகூர் மஇகா துணைத் தலைவர் நிலா ராஜா, மாநில செயலாளர் ஆர். குமாரன் மற்றும் துணைச் செயலாளர் சுஜன் இந்த புதிய கட்டிடம் வாங்குவதற்கு முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த தொகுதியின் செயற்குழு உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தக் கட்டிடம் எங்களின் போராட்டத்தின் சின்னமாக விளங்குகிறது என்றார் அவர்.


