
கோலாலம்பூர் அக் 7
நமக்கு எதிரான விமர்சங்களை கண்டு குறிப்பாக நமது இந்திய பெண்மணிகள் ஒருபோதும் அஞ்ச கூடாது என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
ஒரு பெண் துணையமைச்சர் என்ற வகையில் பல விமர்சனங்களை தாம் கடந்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு முறையும் மோசமான விமர்சனங்களை தாம் எதிர்கொள்ளும்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமக்கு வழங்கிய ஆலோசனையை தான் பின்பற்றி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
‘விமர்சனங்களை கண்டு துவண்டு போவாதே, மாறாக உன்னையே நீ செதுக்கி கொள்’ என்ற பிரதமரின் இந்த ஆலோசனையை தாம் தொடர்ந்து பின்பற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு மலேசிய தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்ட கவிமுன்றில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசினார்.

நாடறிந்த எழுத்தாளரும் அறிவிப்பாளருமான பொன் கோகிலம் முயற்சியில் கடந்த 2020-ல் தொடங்கப்பட்ட இந்த மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நேரடியாகவும் இணையத்தின் மூலமாகவும் தமிழ் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை இந்த மன்றம் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக இளைய கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான பட்டறைகளை இந்த மன்றம் நடத்தி வருகிறது.
இந்த மாபெரும் முயற்சியின் வெற்றியாக 8 புதிய இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே இந்த புதிய இளம் எழுத்தாளர்களுக்கு தாம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சரஸ்வதி தெரிவித்தார்.
பிரதமர் தமக்கு வழங்கிய அதே அறிவுரையை தான் இந்த இளம் எழுத்தாளர்களுக்கு தான் கூற விரும்புவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
விமர்சனங்களை கண்டு வேண்டாமல் தொடர்ந்து உங்கள் வழியில் பயணியுங்கள்.. வெற்றி நமதே என்றார் அவர்.


