
இந்நாட்டில் உள்ள பல்லின மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மலேசிய சமூகத்தின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு வலுப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு பல்கலைக்கழக மாணவர்களின் தேசிய ஒருங்கிணைப்பு பயணித்தல் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பல்லின மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகம்,பொலி டெக்னிக் உங்கு ஓமார், சுல்தான் அஸ்லான் ஷா பல்கலைக்கழகம்,பெட்ரோனாஸ் பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் யுஸ்ரி, தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


